ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக எச்.எம்.எம்.ஹமீம்


அனா-

ட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.எம்.ஹமீம் இன்று (14.11.2017) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இவர் ஏறாவூர் நகரசபையின் செயலாளராக ஏழு வருடங்களும் ஐந்து மாதங்களும் கடமை புரிந்து வந்த எச்.எம்.எம்.ஹமீம் சிறந்த நிருவாக சேவை காரணமாக அவரது காலத்தில் ஏறாவூர் நகர சபை தேசியத்தில் பல விருதுகளை தனதாக்கிக் கொண்டது.

எதிர் காலத்தில் இவரது வழிகாட்டலில் ஓட்டமாவடி பிரதேச சபையும் தேசியத்தில் பல விருதுகளை பெற்று தனது பெயரை மேலோங்கச் செய்யும் என்று பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறந்த நிருவாக சேவை அதிகாரியான எச்.எம்.எம்.ஹமீம் ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாடி பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எஸ்.சர்வேஸ்வரன் இன்று (14.11.2017) வாகரை பிரதேச சபையின் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -