முஸ்லிம் தரப்புக்கும், பொதுபல சேனாக்கும் நடைபெற்றுவரும் பேச்சுக்களை பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருதரப்புக்கும் இடையிலான 5 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நவம்பர் 2 ஆம் திகதி, வியாழக்கிழமை நடைபெற்ற போதே, முஸ்லிம் தரப்பினர் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
மிகவிரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அதேவேளை 5 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தையில் முஸ்லிம் பாடசாலைகள், மதரஸாக்கள் குறித்து பொதுபல சேனா கேட்ட கேள்விகளுக்கு முஸ்லிம்கள் தரப்பில் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.ஜம்மியத்துல் உலமா சபை சார்பில், பேச்சில் பங்கேற்ற மௌலவி பாசில் உரிய விளக்கத்தை வழங்கியுள்ளார்.
மேலும் முஸ்லிம் தரப்பினர் நவம்பர் முடிவதற்கிடையில் இப்பேச்சுக்களை முடித்துக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுபலசேனாக்கு தம்மால் முடிந்தளவு, முஸ்லிம்கள் பற்றி இருந்த சந்தேகத்தை நீக்கியுள்ளதாக முஸ்லிம் தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.
அத்துடன் பள்ளிவாசல்களையும், மதரஸாக்களையும் சென்று பார்வையிட பொதுபல சேனாக்கு முஸ்லிம் தரப்பு பச்சை கொடி காட்டியுள்ளது. இதன்போது முஸ்லிம் பிரதிதிதி ஒருவரும் இணைந்திருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சு ஆரம்பித்த பின்னர் ஞானசாராவின் நிலைப்பாட்டில' மாற்றம் தென்படுவதையும், அவரிடமிருந்தோ அல்லது அவர் தரப்பிடமிருந்தோ முஸ்லிம் எதிர்ப்போ அல்லது இஸ்லாமிய வெறுப்பையோ காணமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முஸ்லிம் தரப்பு, பொதுபல சேனாவுடன் தாம் பேச்சை ஆரம்பித்த பின்னர் ஏனைய பௌத்தசிங்கள இனவாத குழுக்கள் தமது ஆட்டதை நிறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.
மேலும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இதுவரை பொதுபல சேனாவுடன் மேற்கொல்ட பேச்சுக்கள் பற்றிய விளக்கத்தை வழங்கவும் முஸ்லிம் தரப்பினர் முடிவெடுத்துள்ளனர்.
JaffnaMuslim