இஸ்ரேலுக்கு இரகசிய விஜயம் செய்த சவூதி இளவரசர் சிக்கினார்..

இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். middleast monitor (23) கடந்த செப்டம்பர் மாதம் சவூதியின் பட்டத்திற்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவுக்கு ரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் ஊர்ஜிதம் செய்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி அஊக இற்கு கருத்து வெளியிட்டபோதே பெயர் குறிப்பிட விரும்பாத அந்த இஸ்ரேலிய உயர் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல் அவிவ்வில் முஹம்மத் பின் ஸல்மானின் சந்திப்பு யாருடன் இடம்பெற்றது?, பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹுவுடனான சந்திப்பின் முடிவுகள் என்ன என்பது குறித்து அக்குறிப்பிட்ட உயர் அதிகாரி கருத்து வெளியிட மறுத்துள்ளார். இவர் கருத்து வெளியிடுவதற்கு முன்னர் இஸ்ரேலின் அரசாங்க வானொலியான ஹிப்ரோ ரேடியோ இத்தகவலை உறுதிசெய்திருந்தது.

அதன்படி, “கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி சவூதி அரண்மனை இளவரசர் ஒருவர் நாட்டை (இஸ்ரேலை) தரிசித்தார். சிரேஷ்ட அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்” என வானொலியின் அச்செய்தி தொடர்கின்றது.

இவ்விஜயத்தின்போது இஸ்ரேலின் வாராந்த வலதுசாரிப் பத்திரிகையான Makor Rishan இல் பத்திரிகையாளராகப் பணியாற்றும் Ariel Kahana அவரது டுவிட்டர் செய்தியில், அரசாங்க உத்தியோகபூர்வ தூதுக் குழுவொன்றுடன் முஹம்மத் பின் ஸல்மான் இஸ்ரேலுக்கு வருகை தந்து உயர் அதிகாரிகளைச் சந்தித்தார் (“Bin Salman visited Israel with an official delegation and met with officials.”) என செய்தி வெளியிட்டிருந்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் சவூதியின் பிரபல இணையச் செய்தியாளர் முஜாஹித் பின்வருமாறு எழுதியிருந்தார். “இஸ்ரேல் விவகாரங்கள் குறித்த விஷேட நிபுணரும் சர்வதேச நம்பகத் தன்மையைப் பெற்றவருமான பத்திரிகையாளர் நோகாதர்னோ பொல்ஸ்கி இஸ்ரேலுக்கான முஹம்மத் பின் ஸல்மான் விஜயத்தை உறுதி செய்துள்ளார்.”

அறபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமான உறவுகள் குறித்தே இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிட்டிய எதிர்காலத்தில் இஸ்ரேலை ஒரு சகோதர நாடாக வளைகுடா நாடுகள் அறிவிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு, சவூதி அறேபிய மற்றும் இஸ்ரேலின் பொது எதிரியாக ஈரான் கருதப்படும் எனவும் செப்டம்பர் 6 ஆம் திகதி பிரதமர் நெடன்யாஹு ஆற்றிய உரையொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -