ஜுனைட்.எம்.பஹ்த்-
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் ரூபா இருபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபை பொது மலசலகூடம் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை 28.11.2017 நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் இடம்பெற்றது...
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி.எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை , நகரசபை ஊழியர்கள், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் செயலாளர் அஹ்மட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் அனைத்து பாகத்திலும் இருந்து வருகைதரும் பயணிகளுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படும் இவ் பொது மல சல கூடம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது....



