நேத்ரா தொலைக்காட்சியில் விசேட மீலாத் நிகழ்ச்சிகள்

நேத்ரா தொலைக்காட்சியின் 'அருள் நபி' விசேட மீலாத் நிகழ்ச்சி 01.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 4.30 முதல் 6.30 வரை ஒளிபரப்பாகும். முஸ்லிம் நிகழ்ச்சி பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.கே.எம். யூனுஸ் அவர்களின் மேற்பார்வையிலும் ஓருங்கிணைப்பிலும் இடம்பெறும் இந் நிகழ்ச்சிகளை அஹமட் எம். நஸீர் தொகுத்து வழங்குகிறார்.

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவிகள்; நபி புகழ் கஸீதா பாடுகின்றனர். இறக்காமம் பர்ஸானா ரியாஸ் கதை வசனம் எழுதிய 'பொம்பளங்க வேல' என்ற நாடகம் இடம்பெறும். மபாஹிர் மஸூர் மௌலானாவின் நெறியாள்கையில் இடம்பெறும் இந் நாடகத்தில் கவிஞர் எஸ். ரபீக், பர்ஸானா ரியாஸ், அஸ்வான் சக்காப் மௌலானா, முஹம்மது ரியாஸ், விஜயா துரைசாமி, செல்வன். தில்டர் பத்தீன், இவர்களுடன் கலாபூஷணம் ஞெய் ரஹிம் ஷஹீத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில்; 'நேற்று, இன்று, நாளை' என்ற மகுடத்தில் இடம்பெறும் கவியரங்கில் கவிஞர்கள் கம்மல்துறை இக்பால், மன்னூரான் ஷிஹார், என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடுகின்றனர். இதனை முபாரக் மொஹிதீன் தயாரித்து வழங்குகிறார். உள்ளுர் கலைஞர்களின் இஸ்லாமிய பாடல்கள் தொகுப்பான '. இசைத்தென்றல்' நிகழ்ச்சியினை இலங்கை வானொலி அறிவிப்பாளர் முஹம்மது பகுர்டீன் தொகுத்து வழங்குகிறார். சீ.பீ.எம் சியாம் இதனை தயாரித்திருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -