கிராமிய பொருளாதார அமைச்சின் வாழ்வாதார உதவி








எஸ்.எம்.எம்.முர்ஷித்- 

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான ஊத்துச்சேனை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில் உபகணரங்கள் வழங்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

பிரதியமைச்சரின் ஊத்துச்சேனை இணைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன், எஸ்.றிஸ்மின், ஏ.அக்பர், எஸ்.சறூக் மற்றும் கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இப்பிரதேச மக்களின் பயிர்ச் செய்கைக்குரிய சோளம், கச்சான் விதைகள், மருந்து தெளிக்கும் கருவி மற்றும் மண்வெட்டி போன்ற பொருட்கள் நூற்றி ஐம்பது பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -