கல்முனை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவையாக இரத்தசுத்திகரிப்பு அதி திவீரசிகிச்சை

காரைதீவு நிருபர் சகா-

ல்முனை ஆதார வைத்தியசாலையின் 200வருடகால வரலாற்றில் முதற்றடவையாக முக்கிய மூன்று சிகிச்சைப்பிரிவுகள் அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இரத்த சுத்திகரிப்புப் பிரிவு(Dialysis) ) அதிதிவீர சிகிச்சைப்பிரிவு (I.C.U.) இதயநோய சிகிச்சைப்பிரிவு (Cardiology)) ஆகியவையே அந்த மூன்று பிரிவுகளாகும்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் மேற்கொண்ட அதிதீவீர முயற்சியால் இப்பிரிவுகள் இப்பழம்பெரும் வைத்தியசாலைக்குக் கிடைக்கப்பெற்றன.
இரத்த சுத்திகரிப்புப் பிரிவுக்குப் (Dialysis) பொறுப்பாக பொதுவைத்திய நிபுணர்களான டாக்டர் ஆர்.ரமேஸ் மற்றும் டாக்டர் என்.இதயகுமார் ஆகியோர் பொறுப்பாகவுள்ளனர்.

அதிதிவீர சிகிச்சைப்பிரிவு(I.C.U)க்குப் பொறுப்பாக மயக்கமருந்துநிபுணர் டாக்டர் எஸ்.தேவகுமாரும் இதயநோய் சிகிச்சைப்பிரிவுக்கு (Cardiology இதயநோய்நிபுணர் டாக்டர் நௌசாட்அலியும் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதான மூன்று சிகிச்சைப்பிரிவுகளும் இப்பிராந்திய மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இவை சிறந்த வைத்தியசேவையை வழங்கிவருகின்றன.

இதற்கு முன்பெல்லாம் இந்தச்சேவைகளுக்காக இப்பிரதேச மக்கள் காலநேரத்தையும் பணத்தையும் செலவழித்து நீண்டதூரம் அலைந்துதிரியவேண்டி நேரிட்டது. தற்போது இவ்வசதி காலடியில் கிடைத்துள்ளதனால் நோயாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

1973இல் ஆதாரவைத்தியசாலையான இவ்வைத்தியசாலை கடந்த 44 வருடங்களாக அம்பாறை மாவட்ட கரையோரமக்களுக்கு தரமான வைத்தியசேவையைச்செய்து வருகின்றமை தெரிந்ததே.

வெகுவிரைவில் புதிய சத்திரசிகிச்சைக்கூடம் ((Operation Theater)) வைபவரீதியாகத் திறந்துவைக்கப்படவிருக்கிறது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -