இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நான் கேட்ட கேள்விக்கு மிகத்தெளிவான பதிலை கூறினார்.
அதாவது கல்முனையை நான்காகத்தான் பிரிக்க வேண்டுமாயின் அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் ரிசாதும் இணைந்து ஒரு வார்த்தை சொன்னால் உடனடியாக அதனை செய்வதாக கூறினார். அத்துடன் தமிழ் கூட்டமைப்பின் அனுமதியும் தேவை என்றார்.
தமிழ் கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசின் சம்பந்திக்கட்சி. தலைவர் சம்பந்தன் வீட்டுக்கு சென்று அமைச்சர் ஹக்கீம் விருந்துண்ணும் அளவு நெருக்கமானவர்கள். மு. கா தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சி வேறு செய்தது. ஆகவே இது விடயத்தில் சம்பந்தனின் அனுமதி பெறுவது ஹக்கீமுக்கு ஜுஜுபி.
எனவே உடனடியாக இந்த மூன்று கட்சிகளும் கல்முனையை முன்னர் இருந்தது போல் நான்காக பிரிக்கும்படி எழுத்து மூலம் கொடுங்கள். காரியம் உடனடியாக நிறைவேறும். இது விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் முன்னின்று முயற்சி செய்தால் கல்முனை மக்களுக்கும் பாதிப்பின்றி சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை பெற முடியும். அதற்கான வாக்குறுதியை நாம் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் பெற்றுள்ளோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி.