மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்க சந்திரிக்காவுக்கு எந்த அருகதையுமில்லை -MPசாணக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எந்த அருகதையுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்ககுறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

கூட்டு எதிர்க்கட்சியுடன் சமாதானம் பேச வருபவர்களுக்கு கன்னத்தில் அறைந்துஅனுப்புவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். இவருடன்சமாதானம் பேச செல்ல வேண்டிய எந்த தேவையும் கூட்டு எதிர்க்கட்சிக்கு இல்லை. 

இவர் ஒரு காலத்தில் இலங்கை ஜனாதிபதியாகவும் சு.காவின் தலைவியாகவும்இருந்திருக்கலாம். அந்த நினைப்பு தற்போதும் அவரது உள்ளத்தை விட்டகலாததால்இப்படி அவர் உளறிக்கொண்டிருக்கலாம். 

தற்போது இவர் சு.கவின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் மாத்திரமே. ஒரு தொகுதிஅமைப்பாளருடன் சமாதானம் பேசச் செல்ல வேண்டிய எந்த தேவையும் எமக்கில்லை.ஏனையோருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஒரு தொகுதியின் அமைப்பாளராக இருக்கவெட்கப்பட வேண்டும். அது தான் அவருக்கு தற்போது மக்கள் மத்தியில் உள்ளமதிப்பாகும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போது ஜனாதியாக இல்லாதுபோனாலும் தனது மக்கள் செல்வாக்கால் இவ்வரசையே அசைத்து பார்க்கின்றார்.இதுதான் அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையில் உள்ளவேறுபாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்திலேயே சு.க மிகவும் பலம்வாய்ந்ததாக இருந்தது. மூன்றில் இரண்டு பெரும் பான்மையை சாதாரணமாகவைத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவோ தனது ஆட்சிக் காலப்பகுதியில்ஆட்சி செய்ய முடியாமல் 2002ம் ஆண்டு ஆட்சியை ரணிலிடம் பகிரும் நிலைக்குதள்ளப்பட்டார். மிகவும் உறுதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதலைமையிலான சு.காவின் ஆட்சியை நரித்தனமாக வீழ்த்தி சு.காவின் பரமவிரோதிகளான ஐ,தே.கவில் கையில் ஆட்சி செல்ல வித்திட்டு சு.காவுக்கு மிகப் பெரும்துரோகமிளைத்த முதன்மையானவர்களில் ஒருவர் இந்த முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்காவாகும். இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பற்றியோ சு.கபற்றியோ கதைக்க எந்த தகுதியும் அற்றவர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -