தரசேனை அல்மஜ்மாஹ் பகுதியில் புனரமைக்கப்பட்ட ஜாமியுல் அக்பர் பள்ளிவாயல் திறந்து வைப்பு.







ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான தரசேனை அல்மஜ்மாஹ் பகுதியில் புனரமைக்கப்பட்ட ஜாமியுல் அக்பர் பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டது.

அல்மஜ்மாஹ் முள்ளிவட்டவான் கமநல அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தப்பா தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபரும் ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்னாள் செயலாளருமான எம்.யூ.எம்.இஸ்மாயில் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கொழும்பு அல் ஸக்கீனா குர்ஆன் கலாசாலையின் விரிவுரையாளர் நெய்னா முகம்மட் புஹாரி அஸர் தொழுகையினை நடாத்தி வைத்ததுடன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சுகநலுக்காக வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -