பெண் ஊடகப் பணியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு

File Photo
பாறுக் ஷிஹான்-

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் பல வருடங்களாக இவர் பணியாற்றினார். கடந்த வருடம் அங்கிருந்து வெளியேறிய இவர் காலைக்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் சில மாதங்கள் பணியாற்றினார்.

திருமணத்தின் பின்னர் நெடுந்தீவில் சென்று வசித்தமையால் இவர் பத்திரிகை அலுவலகப் பணியை இடைநிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -