மானிப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாரின் அதிரடியால் கைதான ஆவாக்குழு

பாறுக் ஷிஹான்-

மானிப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஆவாக்குழுவினை சேர்ந்த நபரை நேற்று(29) மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.

கைதான இளைஞன் மாசியப்பிட்டி சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 14ம் திகதி சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் கோண்டாவில் பகுதிஇ ஜந்து சந்தி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் நேரடி தொடர்புபட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -