பாறுக் ஷிஹான்-
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று(30) பிற்பகல் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
முன்னனி சார்பாக யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ் உதவி தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில்
நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என தாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருவதாகவும் அந்த வகையில் தாம் யாழ்மாவட்டத்தின் ஏனய பகுதிகளுக்குமான தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாவும் தெரிவித்தார்
மேலும் மகிந்த ராஜபக்சவினால் மாத்திரமே தமிழ் மக்காளுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முடியும் என்றும் அது மாத்திரமல்லாது அபிவிருத்தியை பொறுத்த வரையிலும் எமது கட்சியினரால் மாத்திரமே சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் தாமரை மொட்டு சின்னத்தில் தமது கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது என அவர் தெரிவித்தார்.
மேற்படி முன்னணியில் ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.
இதேவேளை சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தது.