நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தில-அமைச்சர் பழனி திகாம்பரம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு வாய்ப்யு அளித்தமைக்காக முதலில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வரவு செலவுத்திட்ட உரையை நாட்டில் பொருளாதார இலக்குகளை அடைவதற்காக அல்லாமல் தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான பரப்புரையாக வெளியிட்டு வந்த நாட்கள் கடந்த மூன்ற ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அவதானித்தோம்.
அன்று மலையக மக்களுக்காக ஐம்பதினாயிரம் வீடுகள் எனும் அழகிய வார்த்தைகளை ஏட்டில் கண்டோம். ஆனால் இன்று வருடந்தோறும் இருபத்தைந்தாயிரம் வீடுகளுக்கான அனுமதி எங்களுக்கு கிடைக்கின்ற அதேநேரம் அதனை செயற்படுத்துவதற்கான சுதந்திரமும் எமது அமைச்சுக்கு இந்த நல்லாட்சியிலே கிடைத்திருக்கின்றது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர அவர்களே
கடந்த பத்தாண்டு காலத்தில் பாரிய கடன் சுமைகள் ஏற்றப்பட்டுள்ள இலங்கை பொருளாதாரத்தினை மீளவும் கடனற்ற நாடாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே இந்த வரவு செலவுத்திட்டம் அமையப் பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாது நாட்டின் ஒரு பகுதியை மாத்திரம் இலக்கு வைத்து நிதி ஒதுக்கீடுகளைச் செய்யாமல், நாடு முழுவதற்குமான அபிவிருத்தித் திட்டங்களை இலக்காகக் கொண்டதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பேதமில்லாமல் எல்லா பகுதிகளுக்குமான அபிவிருத்தி திட்டங்கள் என முன்மொழியப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியானது நாட்டில் நல்லிணக்கததை உருவாக்குதவற்கான நல்லதோர் அறிகுறியாகும்.
மலையக மக்களை பொறுத்தமட்டில் தமது 200 வருட கால இலங்கை வரலாற்றில் தாம் அமர்த்தப்பட்டிருக்கும் லயன் குடியிருப்புகளில் இருந்து விடுவிக்கும் கோரிக்கை அரசியல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள காலமாக இதனைக்கொள்ளலாம்.
எமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் மலையகப் பெருந்தோட்ட மக்களின் தனிவீட்டு தேவையினை உணர்ந்து அதற்கான வாய்ப்புகளை வரவ செலவுத்திட்டத்திலே அறிவித்து வருகின்றது.
எமக்கு ஒதுக்கபடுகின்ற நிதி என்பது எமது தேவையுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதனை நாங்கள் உணரந்துகொண்டுள்ளோம். எனினும், ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக்கொண்டு பணிகளை நிறைவேற்ற அரசாங்கம் எங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் கட்டப்படுகின்ற வீடுகள் அமைந்துள்ள காணிகளுக்கு முழுமையாக காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அமைச்சரவைக்கு நான் சமர்ப்பித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பெருந்தோட்ட அமைச்சும் காணி அமைச்சும் இணைந்து எமது காணி உறுதி வழங்கும் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது. அதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் எனது நன்றிகளை இந்த உயரிய சபையிலே கூற கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு முன்னதான பல்வேறு சந்தர்ப்பங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு லயன் அறைகளைச் சொந்தமாக்கவும், காணி உறுதிகள் என்ற பெயரிலும் ஏதேனும் ஆவணம் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. நல்லாட்சி காலத்தின் நூறு நாள் ஆட்சியின்போதும் மறைந்த ராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்துடன் இணைந்து நாம் ஓர் உறுதி ஆவணத்தை வழங்கியிருந்தோம். அப்போது அது முழுமையான காணி உறுதி இல்லை என்பதை நாம் அறிந்திருந்தோம். எனினும் நூறு நாட்களில் அந்த முயற்சியை செய்ததன் விளைவாகNவு இன்று முழுமையான காணி உறுதியைப் பெற்றுக்கொடுக்க எம்மால் இயலுமாகியுள்ளது.
அன்று எம்மை விமர்சித்தவர்கள் இன்று வாயடைத்து போயுள்ளார்கள். இன்று நாங்கள் ஆரம்பித்து வைக்கும் ஒவ்வொரு பணியும் வரலாறு சார்ந்த முக்கியமான விடயமாகும். நாளை நாங்கள் அரசியல் செயற்பாட்டில் இல்லாத காலத்திலும் இத்தகைய காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை எவரும் முன்னெடுத்தே ஆக வேண்டும். அதற்கான முன்மாதிரியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.
கௌரவ சபாநாயகர அவர்களே
எனது பொறுப்பின் கீழ் இயங்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு மலையகப் பெருந்தொட்டப்பகதிகளில் புதிய கிராமங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதுடன் சமுதாய அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கான இலக்குகளைக் கொண்டதாகும். எமது அமைச்சின் கீழ் சுமார் நான்கு மாகாணங்களில் வாழும் சுமார் பன்னிரெண்டு மாவட்டங்களில் அமையப் பெற்றுள்ள பெருந்தோட்ங்களில் வாழும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளது.
இந்த பெருந்தோட்டங்கள் அனைத்துமே நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுத்தரும் துறைகளாகும். இந்த பெருந்தோட்டங்களை பராமரிக்கும் கம்பனிகளே ஆரம்ப காலத்தில் இருந்து அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தன.
ஆனால் இன்று அத்தகைய பெருந்தொட்ட கம்பனிகள் உட்கட்டமைப்பு விடயங்களை கவனிப்பதில் இருந்து தம்மை விலக்கிக்கொண்டுள்ளன. பெருந்தொட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு விடயங்களை மேற்கொள்வதற்கு என உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனமான பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் எனது அமைச்சின் கீழ் செயற்பட பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதன் முழு நிர்வாகக் கட்டுபாடுகளும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கீழாகவே வருகின்றது.
அந்த நிறவனத்தின் ஆளணியினருக்கு அந்த கமபனிகளே சம்பளத்தை வழங்குகின்றன. எனவே எமது அமைச்சுக்கு முழுமையான வகை கூறும் பொறுப்பு அவர்களுக்கு இல்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தில் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மாதாந்தம் செலுத்த வேண்டிய நிதியினை முறையாக செலுத்துவதில்லை. அவர்கள் வழங்குகின்ற நிதிப்பங்களிப்பு உரிய உத்தியோத்தர்களுக்கு சம்பளங்களை வழங்கவும் அலுவலக கட்டடங்களை பராமரிக்கவுமே போதுமானதாக உள்ளது. அவர்களைக்கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் எனது அமைச்சின் ஊடாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது.
எனவே எனது அமைச்சிற்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் அதன் கீழ் முன்னெடுக்கவேண்டிய பணிகளுக்கும் பாரிய இடைவெளி ஏற்படுகின்றது.
இது மாத்திரமல்ல ஒரு அமைச்சின் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்கும்போது போதுமான அளவு ஆளணியினர் அவசியமாகும். பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினை மாத்திரம் நடைமுறைப்படுத்தும் நிறுனவமாகக் கொண்டுள்ள எமக்கு அங்கு போதிய ஊழியர்கள் இன்மையால் குறிப்பிட்ட வருட காலத்தில் உரிய பணிகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.
இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு எமது அமைச்சின் கீழ் தனியான அதிகார சபை ஒன்றை அமைக்கும் எனது யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் நாடாளுன்றத்துக்கு சமர்ப்பிக்கபடவுள்ள அந்த யோசனைக்கு இந்த உயரிய நாடாளுமனற்ததின் அனுமதியையும் நான் வேண்டி நிற்கின்றேன்.
கௌரவ சபாநாயகர அவர்களே
1996 ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை 2009 ஆண்டு ஆகும்போது தாரை வார்த்துவிட்டு மக்களுக்கான அமைச்சை விட்டு விட்டு மாடுகளுக்கான அமைச்சை நடாத்திக்கொண்டிருந்தவர்கள் கையில் இருந்து அதனை கழற்றி எமது மக்கள் எனக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தார்கள். 2015 ஆம் ஆண்டு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என மீண்டும் மக்களுக்கான அமைச்சினை உருவாக்க கோரி நான் பொறுப்பேற்றபோது அதனை இயக்குதவற்கு கட்டடம் கூட இருக்கவில்லை. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இயங்கிய கட்டத்தின் ஒரு பகுதியிலேயே நான் எனது கடமைகளை பொறுப்பேற்க நேர்ந்தது.
எனினும் குறைந்த அளவான வளங்களைக்கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சினைக் கொண்டு நூறு நாள் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயற்பட்டமை காரணமாக 2015 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு என விரிவுபடுத்தப்பட்டதாக எனக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அமைச்சிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி குறைவானதாக உள்ளபோதும், வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியா மாவட்டத்திற்க மாத்திரம் சேவையாற்றாது பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் எனது பணிகளை முன்னெடுத்துள்ளேன். மாத்தறை, காலி, ரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, குருநாகல், என அனைத்து மாவட்டங்களிலும் எனது பணிகளை முன்னெடுக்கும்போது குறித்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு செயற்பட்டுள்ளேன் என்பதை இந்த உயரிய சபையில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள்.
இத்தகைய பரந்த செயற்பாடுகளின்போது அரசாங்கத்தினால் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை முறையாக கையாள்வதிலும் ஒழுங்காக அரச கணக்குகளை பேணுவதிலும் கவனமாக செயற்படுமாறு எனது அமைச்சின் செயலாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நான் பணிப்பரை வழங்கிவந்துள்ளேன்.
இதன் பிரதி பலனாக இந்த பாராளுமன்றத்தின் நிலையியல் குழுவான அரச பொதுக் கணக்குகள் குழுவினால் சிறந்த நிதியியல் கட்டுப்பாட்டுகளைக் கொண்டிருந்தமைக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு ஊழலற்ற சேவையினை ஆற்றுவதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதனைக் கருதுகின்றேன். இதற்காக உழைத்த அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதோடு,
இப்போது எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி பெரும்பாலும் வீடமைப்பினை இலக்காக் கொண்டே செயற்படுத்த வேண்டி இருப்பதால் பாதையமைப்பு போன்ற உட்கட்டமைப்பு விடயங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் தனியான நிதியினை ஒதுக்கீடுகளை செய்துதருமாறு நிதியமைச்சரை வேண்டிக்கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அவருக்கு வாழத்துக்களையும் கூறி விடைபெறுகின்றேன்.