கடலில் மூழ்கிய சாய்ந்தமருது மாணவனின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் திருக்கோவிலில் கரையொதுங்கியது..!

அஸ்லம் எஸ்.மௌலானா-

டந்த சனிக்கிழமை (11) சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் அப்றின் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் ஜனாஸாவே இவ்வாறு கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தர வகுப்பில் கல்வி பயில்கின்ற சாய்ந்தமருதை சேர்ந்த ஆறு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூவர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கியுள்ளனர். இவர்களுள் இருவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு, ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மற்றைய மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறியிருந்தனர்.

அதேவேளை குறித்த ஒரு மாணவன் காணாமல் போயிருந்தமை தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்த மாணவனை தேடும் பணிகள், மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாய்ந்தமருதில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருக்கோவில் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

இது அவரது உடலம்தான் என்பதை பெற்றோர் அடையாளம் காட்டினர் எனவும் பிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -