அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அல்-ஹாஜ் றிசாத் பதியுத்தீன் அவர்களின் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனையில் வீதி அமைக்கப்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை, புறத்தோட்டம் பாத்திமா அறபிக்கல்லூரி வீதியில் அதிகமான மக்கள் உள்ள பிரதேசம் இதுவரை காலமும் குண்டும் குழியுமாக காணப்பட்டதை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அல்-ஹாஜ் சமீர் ஹாஜியினல் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களினால் இவ்வீதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது இவ்வீதியின் வேலைத்திட்டங்கள் நிறைவுபெறுவுள்ளதுடன் கொன்றீடினால் இடப்பட்ட பாதையாகவும் காணப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -