வெள்ளிமலை காணி அபகரிப்புக்கு எதிராக முசலி மக்கள் குரல்கொடுக்க வேண்டும்! சமுகத்தின் பிரச்சினை



சிபான்-

ன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவு வெள்ளிமலை கிராமத்திற்கும்,பாடசாலைக்கும் சொந்தமான காணியினை அரிப்பு கத்தோலிக்கர்கள் அடாத்தாக பிடித்து அதற்கான சுற்றுமதில் அமைக்கும் வேலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாக நேற்று (17) வெள்ளிமலை ஜூம்மா பள்ளிவாசல் தொழுகையில் கையொழுத்து நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள்,உறுப்பினர்கள்,கல்வியலாளர்கள்,சமுக சிந்தனையாளர்,அரசியல்வாதிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என தெரிவித்தனர்.

இதில் விஷேட பேச்சாளராக அஷ்சேக் தௌபீக் (மதனி) கலந்துகொண்டு தெரிவிக்கையில்

இது போன்று முசலி பிரதேசத்தில் உள்ள பல இடங்களில் காணியினை சுவிகரித்துகொள்ள வேண்டும் என்று கத்தோலிக்கர்கள் பல விதமான சூழ்ச்சிகளை மேற்கொள்ளுகின்றார்கள்.இதனை எமது சமுகம் தட்டிக்கேட்காமல் வாய்மூடி மௌனியாக இருந்துவருகின்றது.

வட மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் சமுகத்தின் தலைநகர் பகுதியான சிலாவத்துறையில் கூட சிலைகளை அமைத்துள்ளார்கள்.இதனை நாங்கள் கண்டிக்க வேண்டும் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீதி ஒரங்களில் சிலைகளை அமைப்பது தடைசெய்யப்பட வேண்டும் என் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -