முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளின் தோழன் புத்தக வெளியீடும்!
2024 ஆண்டில் முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் ஊடாக புனித ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளை வழிகாட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள ஹாஜிகளின் தோழன் என்ற புத்தகத்தின் மீள் வெளியீட்டு நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்ப்பு மண்டபத்தில் மௌலவி எம்.எஸ்.எம். சுஹூர்தீன் தலைமையில் 2024.05.13 ஆம் திகதி இடம்பெற்றது.

முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் நிறைவேற்று பணிப்பாளர் அல் ஹஜ் எம்.எஸ்.எப்.ஆர். முகத்தஸி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல். பரீட், மௌலவி சஹ்றான், மௌலவி ரயீஸ் முப்தி மற்றும் மௌலவி சபா மொகமட் அல் நஜாஹி முகத்தமுல் காதிரியி ஆகியோரும் மார்க்க சொற்பொழிவாற்றினர்.

ஹாஜிகளின் தோழன் புத்தகம் தொடர்பில் முன்னாள் கணக்காளர் ஐ.எல்.எம்.பாறூக் அவர்கள் உரையாற்றினார் அதேவேளை நூல்களின் பிரதிகளை அதிதிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வின்போது சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட வர்களுடன் உலமாக்கள் நலன்விரும்பிகள் ஹாஜிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

 இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :