திருகோணமலை ரொட்டறி கழக 45 வது “தொடக்க ஆண்டு” சாசன (Charter Day) விழா



திருகோணமலை ரொட்டறி கழக 45 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 10.05.2024 அன்று நடைபெற்றது வைத்திய கலாநிதி R. ரோஹான்குமார் - சத்திர சிகிச்சை நிபுணர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்..

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் வைத்திய கலாநிதி சௌந்தரராஜன், ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். எங்களிடம் இருந்து மரணம் எய்திய முன்னால் ரோட்டரி அங்கத்தவர்கள் நினைவு கூறப்பட்டார்கள் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் செயலாளர் N.T. ரகுராம், திருகோணமலை ரோட்டரி கழகத்தின், 2023 – 2024 ஆம் ஆண்டின் நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசு பரீட்சையில் தி/ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறு பெற்ற செல்வி K. தான்ய அவர்களுக்கு பணப் பரிசு வழங்கப் பட்டது.
திருகோணமலை ரொட்டறி கழகத்தில் 25 வருடங்களுக்கு மேல் சிறப்பாக சேவையாற்றிய 12 அங்கத்தவர்கள்கள் கௌரவிக்கப்படடார்கள்.

பாக்கு நீரிணையை நீந்திய 13 வயது, செல்வன் ஹரிஹரன் தன்வந் அவர்களும் கௌரவிக்கப் படடார்.

தபால் நிலையத்துக்கு எதிரில் ஒரு புதிய பேருந்து தரிப்பு நிலையம் ஒன்றினை அமைப்பதட்கு Rs. 500,000/= அன்பளிப்பை SKY ROUTE TRAVELS சார்பில் திரு அகிலன் வழங்கினார்

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் சிறப்பு விருந்தினர் வைத்திய கலாநிதி R. ரோஹான்குமார் அவர்களை அறிமுகப் படுத்தி சிறப்புரை வழங்க அழைத்தார்

வைத்திய கலாநிதி R. ரோஹான்குமார் அவர்கள் தமது உரையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தற்போதைய நிலையை எடுத்துக் கூறி எதிர் வரும் காலங்களில் , திருகோணமலை பொது வைத்தியசாலை மேம்படுத்துவதட்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற திட்ட்ங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

விபத்து அவசர (ACCIDENT & EMERGENCY UNIT) சிகிச்சைக்கும் இதய (CARDIOLOGY UNIT) சிகிச்சை நிலையத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எடுத்துரைத்தார். அத்துடன் மேலதிகமாக மருத்தவ உபகரணம் கொள்வனவு செய்வதட்காக Rs. 500 Million ஒதுக்கப் பட்டுள்ளதாக கூறினார்

இறுதியாக ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்தார் திருகோணமலையில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது இங்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இறுதியாக, அடுத்த வருட தலைவர் S. ஜெகதீஸ்வரன் நன்றி உரை நிகழ்தினார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :