உயர்தர சுற்றுப்போட்டிக்கு ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையில் இருந்து இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற உயர்தர சுற்றுப்போட்டியான Division 2 விற்கு நேரடியாக ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்தில் A டிவிசன் பிரிவில் இதுவரைகாலமும் தனது இலக்கை தக்க வைத்துக்கொண்ட ஏறாவூரைச் சேர்ந்த யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகமானது கடின பந்து துறையில் கடந்த பதினெட்டு வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டதில் பல சாதனைகளை தனதாக்கி கொடு வருகிறது,


மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இரு கழகங்கள் கலந்து கொள்ளவுள்ளன. இதில் மற்றைய விளையாட்டு கழகம் மட்டக்களப்பை சேர்ந்த லக்கி விளையாட்டு கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்று போட்டியானது ஆறு மாவட்டங்களை (கண்டி,கேகாலை,நுவரலியா,அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு) உள்ளடக்கி கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.


ARM,றிபாய்
SHM.றிஹான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -