முல்லைத்தீவு கடற்பகுதி நேற்று மாலை முதல், இதுவரை இல்லாத வகையில் மாற்றமடைந்து காணப்படுவதாக, அப் பகுதி மீனவர்கள் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற கடற்படையினர், அடிவானம் வரை குறித்த கடற்பகுதி கறுப்பு நிறத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ளதாக தெரிகிறது.
மேலும், மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
எனினும், சம்பவத்திற்கு முன்னர் பல மீனவக் குழுவினர் கடலுக்கு புறப்பட்டுச் சென்று விட்டதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த மூன்று வாரங்களாக பெய்த மழையினால் முல்லைத்தீவு கடலில் நீர் மட்டம் சுமார் 5 அடி வரை மேழெுந்ததோடு, கடலின் இயல்புத் தன்மையும் மாற்றமடைந்ததாக கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -