அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்ட இளம் பெண்ணுக்கு இந்த நிலையா..!?

வசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் ஆண் தாதியர் இருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மும்பையின் குர்கோன் பகுதியில் உள்ள சிவா மருத்துவமனையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குளிர்பானம் என தவறாக நினைத்து பூச்சிமருந்தை அருந்திய அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு நேரம், குறித்த மாணவியின் பெற்றோர் வீடு திரும்பியதும் இரவு நேரக் கடமையில் இருந்த குல்தீப் (23) மற்றும் ரவீந்தர் (27) என்ற இரண்டு ஆண் தாதியரும் மாணவியை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளனர். தமது விருப்பத்துக்கு மறுத்தால் பிராணவாயு குழாயை அகற்றி அவரைக் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து மாணவி எதிர்ப்புக் காட்டிவந்ததால், அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்து ஏற்றியுள்ளனர். சிறிது நேரத்தில் கண் விழித்த அவரை குல்தீப் கழிவறைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றிருக்கிறார். எனினும் மாணவியின் எதிர்ப்பால் அவரது முயற்சி கைகூடவில்லை.

மறு நாளே மாணவி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டபோதிலும் அவரது கைபேசிக்கு தொடர்பு கொண்ட தாதியர் இருவரும் அவருக்குத் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை மாணவி தன் தாயாருக்குக் கூறியுள்ளார். அவர் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டையடுத்து இரண்டு தாதியரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -