ஏ.ஆர்.எம்.றிபாய், எஸ்.எச்.எம்.றிஹான் -
எதிர்நோக்க இருக்கின்ற அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கு முன் ஆயத்தமாக ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட துடிப்புமிக்க இளைஞர்கள் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனர்த்த உதவிக்குழு என்ற ஒன்றினை ஆரம்பித்து வைத்து இருக்கிறது.
இக்குழுவில் ஊரில் உள்ள துடிப்பான இளைஞர்களையும் அனுபவமுள்ள சமூக ஆர்வலர்களும் உள்வாங்கி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை இக்குழுவில் இணைத்து கொள்ள இருக்கின்றது
தற்போது இடம்பெற்று வருகின்ற காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற,
உதாரணமாக வெள்ள அனர்த்தத்தின் போது மக்கள் படுகின்ற அவலநிலைக்கு உதவி செய்யும் முகமாகவும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு இதற்கு முந்திய காலங்களில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இல்லாத காரணத்தினாலும் பல அசௌகரியங்களை ஏறாவூர் மக்கள் அடைந்து வந்துள்ளனர்.
இதனை தவிர்க்கும் முகமாக நிரந்தர அனர்த்தக்குழு ஒன்றின் தேவையை அறிந்த சம்மேளனம் அதனை தற்போது நடைமுறை படுத்தி இருக்கிறது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் பயிச்சிகளை வழங்கி அவர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.
இவ்வாறான அனர்த்த குழுவின் தேவையை உணர்ந்த ஊரிலுள்ள பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருவதாகவும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மௌலவி வாஜித் தெரிவித்தார்.
