அட்டன் செனன் கே.எம். தோட்டப்பிரிவுக்கான புதிய பாதையின் திறப்பு விழா



மு.இராமச்சந்திரன்-

லையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அட்டன் செனன் தோட்ட கே.எம். பிரிவில் பாதையொன்று செப்பனிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கிணங்க இந்தப்பாதை அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அட்டன் பிராந்திய பணிமனையின் கண்காணிப்பில் செப்பனிடப்பட்ட இந்தப்பாதையைத் திறக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , சங்கத்தின் அட்டன் பிராந்திய அமைப்பாளர் ஜெஸ்டின் , மாவட்டத்தலைவர் மோகன்ராஜ் , வெலிஓயா அமைப்பாளர் ஜேசுதாஸ் , செனன் கேஎம் தோட்ட மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -