மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரை கொல்ல திட்டமிட்டவருக்கு அழைப்பாணை.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சி்ன் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை, படுகொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெட்னத்தின் மகன் ஆதித்தனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிரதிவாதியின் சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சிய விசாரணைகள் நிறைவைடைந்துள்ளதால் பிரதிவாதிகளின் சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மற்றும் கொழும்பு நீதிமன்றப் பதிவாளர்கள் உட்பட நால்வருக்கே அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கந்தவனம் கோகுல்நாத்துடன் இணைந்து, படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2009ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், ஆதித்தன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிராக, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில், அரச சட்டத்தரணி நயனா செனவிரத்னவும் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா அனோமா பிரியதர்சினி ஆகியோரின் அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜரானார்.
சுடரொளி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -