ஆறு வாள்கள்,2 கைக்கோடாரிகள் ஆவாக் குழுவிடம் மீட்பு



பாறுக் ஷிஹான்-

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் 6 வாள்கள் 2 கைக்கோடாரி என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவா குழுவின் முக்கிய சந்தேகநரான மொஹமட் இக்ரம் (22) உட்பட சிவகுமார் கதியோன் (20) இராசேந்திரம் சிந்துயன் (17) ஆகிய மூன்றுபேர் கொழும்பில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 6 வாள்கள் மற்றும் 3 கைக்கோடாரிகள ஒரு கைக்குண்டு மீட்கப்பட்டன .

கொழும்பு மற்றும் வவுனியாவில் கைது செய்யப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(30) முற்படுத்தப்படுவர். ஏனைய மூவரும் விசாரணைகளின் பின்னரே அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -