

மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-
கொய்யாபழம் பரிக்கச்சென்ற 6 வயது சிறுவனை சடலமாக மீட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
போகாவத்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 1 கல்வி பயிலும் 6 வயதுடைய ராஜேந்திரகுமார் அஷ்வின் என்ற சிறுவனே 12.11.2017 காலை போகாவத்தை ஓயவில் சடலமாக மீட்டுள்ளனர்.
11.11.2017 மாலை 5 மணிமுதல் வீட்டிலிருந்த சிறுவன் கானாமல் போன நிலையில் உறவினர்களும் தோட்டமக்களும் தேடுதலில் ஈடுட்டனர்
தோடுதலில் ஈடுபட்டபோதே குறித்த சிறுவன் வீட்டின் அருகிலுள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
சடலத்தை கண்ட பிரதேசவாசிகளும் உறவினர்களும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு வழங்கியதகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் கொய்யாபழம் பரிக்க சென்ற போதே தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என சதேகிப்பதுடன் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாவையிட்டப்பின் பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையை தொடவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




