முசலிப்பிரதேச முஸ்லிம் கிராமங்களை ஆக்கிரமிக்கும் தமிழ் சகோதரர்கள்.

எ.எம்.றிசாத்-


1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர்.

முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை அரிப்புக்கு சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.

இது தடுக்கப்பட வேண்டும் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருற்படுத்தாமல் தமிழ் சகோதரர்கள் அத்துமீறி இடத்தை அபகரிப்பது சரியா.
இந்த இடத்தில் கோவில் அமைக்க வேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அமைப்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கவே தவிர வேறுகாரணம் ஒன்றும் இல்லை.

வடமாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசம் முசலி பிரதேசமாகும் அதை சிதைக்க வேண்டும் என்ற வடமாகாணசபையின் திட்டத்தினை அங்கு வாழும் தமிழ் மக்களை வைத்து அடாவடியாக அரங்கேற்றி வருகின்றனர்.

வடமாகாணசபை வடமாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்வதும் இல்லை அந்த மக்களுக்கு உதவி செய்யும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை செய்ய விடுவதும் இல்லை அதேநேரம் அந்த மக்களை நிம்மதியாக வாழவிடுவதும் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -