அமெரிக்காவில் தேவாலயம் ஒன்றினுள் மர்ம நபர் உட்புகுந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பரிதாபமாக பலி

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில்  மர்ம நபர் உட்புகுந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளதுடன்,  மேலும் 24க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் நேற்று  ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகினர். மேலும், 24க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -