சாய்ந்தமருது பள்ளிவாசல் நிறுவாகத்தினரை 42 தடவைகள் கொழும்புக்கு அழைத்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தருமோம் என்று பல ஏமாற்று வித்தைகளை இறுதித்திகதி வரை நிறுவாகத்தினரை ஏமாற்றிய முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று சாய்ந்தமருது சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவரும் வைத்தியருமான எஸ்.முஹம்மட் தெரிவித்தார்.
சமூக சேவைகள் ஒன்றியத்தின் தலைவருடனான ஊடக சந்திப்பு நேற்று (04) சாய்ந்தமருதிலுள்ள ஒன்றியத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தருமோம் என்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிறுவாகத்தினரை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை எமது மக்களையும் அல்லவா ஏமாற்றியுள்ளார்கள். இவ்விடயம் எப்போதாவது ஒரு நாளைக்கு வெளிவரும் என்று அந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் சிந்தித்து செயற்படவில்லை என்தை நினைத்து அவர்கள் தலை குனிந்து வெட்கப்படவேண்டும். என்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதுமாத்திரமல்லாமல், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை வழங்குவதற்கு சில அரசியல் வாதிகள் தடையாக இருப்பதாகவும், இவ்வாறு பிரிப்பதால் கல்முனை மாநகர சபை மாற்றுச் சமூகத்தின் கைக்கு சென்றுவிடும் என்றும் இப்போது கூறிவருகின்றார்கள். அவர்களின் பொய்யான வாய்ப் பேச்சையும், வாக்குறுதிகளையும் நம்பி நம்பி 42 தடவைகள் கொழும்புக்குச் சென்று ஏமாந்து விட்டோம். இனிமேல் நாங்கள் ஒருபோதும் ஏமாறமாட்டோம் ஏமாறப்போவதும் இல்லை என்று கூறினார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 15 இலட்சம் ரூபாயினை ஏற்பதில்லை என்று இத்தீர்மாத்தை பள்ளிவாசல் நிறுவாகத்துடன் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளின் உதவிகளும் எங்களுக்குத் தேவையில்லை என்றும் தீர்மானித்துள்ளோம்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் றஊப் ஹக்கீம், றிஷாட் பதீயுத்தின் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரால் சாய்ந்தமருது மக்கள் பாரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை அவர்கள் வேறுகண்கொண்டு தங்களின் கட்சிகளை வளர்க்கவேண்டும் என்ற சுய நலனுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும் போலியான பிரச்சாரங்களைச் செய்து எம் சமூகத்தினரை ஏமாற்றி கண்கட்டி வித்தைகளையும் செய்து வந்துள்ளார்கள். இதற்கான பலபபலன்களை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்றார்.
