ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (24) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார். கட்டார் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டார் செல்லவுள்ளனர்.
இதேவேளை, கட்டார் நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி சல்வா வீதியில், அன்சார் சிட்டிக்கு பின்னால் அமைந்துள்ள பீனிக்ஸ் பாடசாலையில் மு.ப. 09 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -