சிங்.பொன்னையா அவர்களின் தீபாவளி வாழ்த்து




 பி.கேதீஸ்-

தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் என் சக இந்துக்களோடு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்;சியடைகின்றேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் தொழிற்ச்சங்கவாதியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா தெரிவித்தார்.

தீப திருநாளை முன்னிட்டு  அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஒளியேற்றி இருள்தனை நீக்கி இன்புற்று அகம் மகிழ்ந்து உளம் கனிந்து பெற்றோர் பெரியோர்களை வணங்கி நலங்கிட்டு, ஆசி பெறுவதோடு. அன்று இறைவன் மஹாவிஸ்ணுவின் அவதாரத்தின் நோக்கம் அதர்மத்தினை அழித்து தர்மத்தினை ஸ்தாபித்த திருநாளில் நாமும் கருணை, நீதி, தர்மங்களை மேலும் தழைத்தோங்கச் செய்வதோடு நமது எதிர்கால இளைய சமுதாயத்தினரையும் அவ்வழியில் வழிநடத்துவோம். அத்துடன் சாந்தி, சமாதானம் நிலைத்திருக்கவும், சகோதரத்துவம், சமத்துவம், நல்லுறவு என்பன தழைத்தோங்கிடவும் நீடித்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -