பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தீபாவளி வாழ்த்து





பி.கேதீஸ்-
ந்த நாட்டில் எல்லா காலத்திலும் தனது நாளாந்த உழைப்புக்கான கூலி முதல் நாட்டு பிரஜையாக அங்கீகரிப்பது வரை அத்தனையையும் போராடியே பெற்றாகவேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த ஆண்டும் கூட மலையக தமிழ் மக்களின் தீபாவளியானது போராட்டத்தின் ஒரு பகுதியாகவே விடிந்துள்ளது.போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட நிலையில் வருடத்திற்கு ஒரு முறை வரும் தீபாவளி பண்டிகை நாளிலாவது குடும்பத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடும் மலையக மக்களோடு நானும் பங்குகொள்கின்றேன். எனினும் அந்த மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சியுடனான தீபாவளியாக அமையுமானால் இரட்டிப்பு மகிழ்வடைவேன் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம.திலகராஜ் விடுத்திருக்கும் தீபாவளி வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டற்ற மகிழ்ச்சி என்பதனை எல்லோரும் அளவில்லா மகிழ்ச்சி என்றே அர்த்தப்படுத்திக்கொள்கின்றார்கள். ஆனால் அதன் உண்மை அர்த்தம் அதுவல்ல. 'மட்டு' என்பது போதை தரும் 'கள்' என பொருள்படும். ஆதிகாலத்திலே மக்கள் தமது சந்தோஷங்களை பகிர்ந்துகொள்ள கள் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே மட்டு அருந்தி மகிழ்சியடைந்தார்கள். அதேநேரம் தங்களது முயற்சியினால் பல்வேறு வெற்றிகளை உணர்ந்தபோது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டு அருந்தாமலேயே மகிழ்ச்சியில் திளைத்தார்கள். எனவே மட்டு இல்லாமலும் கூட மகிழ்ச்சி அனுபவிக்க முடியும். எனவேதான் 'மட்டில்லா மகிழ்ச்சி' எனும் சொல்லாட்சி வந்தது.

கடந்த பல ஆண்டுகளாக மதுவற்ற தீபாவளி கடனற்ற தீபாவளி எனும் பிரசாரத்தை பிரிடோ எனும் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுவருவது சிறப்புக்குரியது. அந்த தொண்டு நிறுவனத்தின பிரசாரத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் மதுவற்ற மலையகம் மாற்றம் என்னில் இருந்து என மது ஒழிப்பு பிரசாரத்தினை முன்வைக்கும் மக்கள் பிரதிநிதியான நானும் 'மட்டற்ற மகிழச்சியுடன் மதுவற்ற தீபாவளி' எனும் உன்னத எண்ணத்தில் இணைந்துகொள்ளுமாறு மக்களை வேண்டிக்கொள்கின்றேன். தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து உறவுகளையும் வாழ்த்துகிறேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -