முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஅத்தின்களுக்கான அதான் கூறும் பயிற்சினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தியுள்ளது. திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் ஆலோசனைக்கமைய உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் அன்வர் அலி அவர்களின் வழிகாட்டலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகார்ட்ஸ் நிறுவன தவிசாளர் ஜுனைட் நளீமி மற்றும் திணைக்கள அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏறாவூர், கல்குடா மற்றும் காத்தான்குடி பிரதேசங்களின் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களின் பாங்கு சொல்லும் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. துருக்கி நாட்டை சேர்ந்த முஹம்மத் பிலால் அவளவாளராக கலந்து கொண்டதுடன் இதற்கான அனுசரணையை ஈகார்ட்ஸ் நிறுவனம் ஏனைய பள்ளிவாசல்களின் உதவியுடன் வழங்கி இருந்தது.
நாட்டின் ஏனையமாவட்டங்களுக்கும் இப்பயிற்சி நெறியினை முன்கொண்டு செல்லவிருப்பதாக திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.