மாகாண சபை கலைக்கப்பட்டாலும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைளும் அபிவிருத்தியும் எம்மால் தொடரும் -கிழக்கு முதல்வர்




 ஹுஸைன் -

மாகாண சபை கலைக்கப்பட்டாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ளும் எமது பயணத்திலிருந்து ஒருபோதும் ஒதுங்கமாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சமகால அரசியல் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மாகாண சபை கலைக்கப்படப் போகிறது என பீரங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணசபை ஆட்சி எப்போதாயினும் கலைக்கப்பட வேண்டியதுதான் என்பதை இவர்கள் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

அரசியலமைப்பின்படி எப்போதாயினும் மாகாணசபையும், நாடாளுமன்றமும், உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படத்தான் வேண்டும்.

மாகாண ஆட்சி நீடித்தாலும், கலைக்கப்பட்டாலும் நாம், பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சார்பாக அவர்களது அரசியல் அதிகார உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம்.

முக்கியமாக சிறுபான்மைச் சமூகங்களின் ஒன்றுபட்ட அரசியல் விடுதலைக்காக நாம் குரலெழுப்புவதை இந்த சோரம்போகும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்திவிட முடியாது” என முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -