எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் பணி புரிந்து ஏறாவூர் ரகுமானிய வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர் வீ.ரீ.எம்.ஜனூன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 25.07.2017 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில், இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியருக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவிகளால் பரிசில்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.