அதிகம் கேட்ட பொய்கள்...

அதிகம் கேட்ட பொய்கள்....

+++++++++++++++++++++++

உங்க தங்கச்சி பாவம்
கணவன்மார் அதிகம் கேட்ட பொய்

சாப்பாடு ருசியா இருக்கு
மனைவிமார் அடிக்கடி கேட்கும் பொய்

வாப்பா இன்னும் வரல்ல
கஷ்த்துகள் அதிகம் கேட்ட பொய்

நீதியை நிலை நிறுத்துவோம்
நல்லாட்சியில் அதிகம் கேட்ட பொய்

ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள்
மேடைகள் அதிகம் கேட்ட பொய்

இன்னும் சற்று நேரத்தில் வைத்தியர் வருவார்
நோயாளிகள் அதிகம் கேட்ட பொய்

எப்பிடி உங்களால மட்டும்
முக நூலில் அதிகம் கேட்ட பொய்

மாப்பிள்ளை தங்கமான (பொ)பையன்
பெண் வீட்டார் அதிகம் கேட்ட பொய்

நாங்கதான் நம்பர் வன்
வானொலியில் அதிகம் கேட்ட பொய்

பதவியைத் தூக்கி எறியத் தயார்
அமைச்சர்களிடம் அதிகம் கேட்ட பொய்

அந்த நாளையில் நாங்க...
பேரப் பிள்ளைகள் அதிகம் கேட்ட பொய்

நேற்று கடுமையான தலைவலி
மெனேஜர்கள் அதிகம் கேட்ட பொய்

சில்லறை இல்லை
பயணிகள் அதிகம் கேட்ட பொய்

பக்கத்து வீட்டுக் காரிதான் பதுக்கினா
மை வெளிச்சத்தில் அதிகம் கேட்ட பொய்

முற்றிலும் இலவம்
மொபைல் கம்பனியில் அதிகம் கேட்ட பொய்

நான் உண்மையில் பொம்புளதான்
பேக் ஐடிகளிடம் அதிகம் கேட்ட பொய்

மகன் எஞ்சினியராக இருக்கார்
கல்யாண வீடுகளில் அதிகம் கேட்ட பொய்.
-முகம்மட் நிலுஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -