பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - அட்டாளைச்சேனையில்

ட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் உளவளத்துணை அலகும் இணைந்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தொடர்பான வழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நாளை 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் பெண்களுக்கு மத்தியில் வேகமாக பரவிவரும் தொற்றா நோயாக ' மார்பக புற்றுநோய்' காணப்படுகிறது. இந் நோயினை ஆரம்பத்தில் கண்டறிந்தால் மூன்றிலொரு வீதமான புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகச்சையளிக்க முடியும். ஆனால் நமது சமூதாய பெண்களின் கவனயீனம், மனப்பாங்கு காரணமாக எமது நாட்டில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் வழிப்புணர்வு என்பது எமது பெண்களுக்கு மத்தியில் அவசியமாகிறது.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் உளவள ஆலோசகர் திருமதி. நூருல் இஸ்ரா பிரதான வளவாளராக கலந்து கொள்ளவுள்ளார். எனவே பிரதேசத்தின் அனைத்து பெணக்ளும் கலந்து பயன்பெறுமாறு பிரதேசத்தின் உளவளத்துணையாளர் மனூஸ் அபூபக்கர் வேண்டிக் கொள்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -