நல்லாட்சியில் மேலோங்கும் பௌத்த ஆதிக்கம்..!

அ.அஹமட்-
லங்கை நாட்டில் பௌத்த மதகுருக்களுக்கு எப்போதும் ஒரு நிலையான இடம் இருக்கும். தற்போது பௌத்த மதகுருக்களின் ஆதிக்கமானது எல்லை மீறிச் செல்கின்றதா என சிந்திக்கும் வகையிலான செயற்பாடுகளை இலங்கைபௌத்த மதகுருக்கள் அமைத்து வருகின்றனர். அண்மையில் இலங்கை அரசியலமைப்பு மாற்ற முயற்சி மற்றும் ஞானசார தேரரின் கைது ஆகிய விடயங்களில் அஸ்கிரிய பீடமானது தனது தலையை நுழைத்திருந்த நிலையில் தற்போது அஸ்கிரிய பீடமானது வடக்கு, கிழக்குமாகாணங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முடிவு செய்துள்ளது.இவைகள் பலவிடயங்களை எமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இச் செய்தியானது அஸ்கிரிய பீடமானது இலங்கை நாட்டின் அரசியலினுள் மிகப் பெரும் தாக்கம் செலுத்த முனைவதைசுட்டிக் காட்டுகிறது.கடந்த ஆட்சிக் காலங்களின் போது பௌத்த மத ஆதிக்கங்களுக்கு இத்தனை அதிகாரம்இருந்திருக்கவில்லை. தற்போதைய ஆட்சியில் ஜனாதியாக மைத்திரி இருந்தாலும் இலங்கை நாட்டை என்னவோபௌத்த ஆதிக்கமே ஆண்டு வருகிறது. 

இதற்கு இவ்வரசு ஞானசார தேரர் போன்றோரின் கோரிக்கைகளுக்கு வழங்கிய முக்கியத்துவம் பிரதான காரணமாகஅமைத்திருக்கலாம். ஞானசார தேரரின் கோரிக்கைகளுக்கே இத்தனை வலுவென்றால் அஸ்கிரிய பீடங்களின்கோரிக்கைகள் எத்தனை வலுவானது?

ஜனாதிபதி மைத்திரி தனது செயற்பாடுகள் அனைத்தையும் தன்னோடு வைத்துள்ள சில பௌத்த மத குருக்களின்பேச்சுக்களுக்கு அமைவாகவே அமைத்து வருகின்றாராம் என்ற பேச்சுக்கள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சி செய்ய ஆரம்பித்தகாலப்பகுதியில் வெளிப்பட்டிருந்தன. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரி கையாண்ட வழி முறைகளே இன்று இலங்கைநாட்டையே பௌத்த மதம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் கொண்டு சேர்த்துள்ளது. இலங்கை முஸ்லிம்கள் ஞானசாரதேரர் போன்ற ஒரு சில தேரருக்கு முடிவு கட்ட கொண்டு வந்த இவ்வாட்சியானது இலங்கை நாட்டையே பௌத்தஆதிக்கத்திடம் தாரை வார்த்துக்கொடுத்துள்ளது. 

நிலைமை இவ்வாறு இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது சுக போகங்களை கருதிஇவ்வரசுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளனர். இன்னும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த காலங்களில்முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு குற்றம் சுமத்துபவர்களும் இல்லாமலில்லை.கடந்தகாலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை கண்ணுற்று முஸ்லிம் மக்கள் எவ்வாறு எடுத்தார்களோ அவ்வாறே முஸ்லிம்அரசியல் வாதிகளை புறக்கணித்த முடிவுகளை எடுக்குமொரு கால கட்டத்தில் உள்ளோம் என்பதை முஸ்லிம் சமூகம்உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -