ஒலுவில் ஏ.சி.எம்.சி பிரமுகர்ககளுடன் ஜெமில் கலந்துரையாடல்!



எம்.வை.அமீர்-

திர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேலைத்திட்டங்களை ஒலுவிலில் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அக்கட்சியின் ஒலுவில் பிரமுகர் எம்.ஜெ.எம்.அஷ்ஹர் தலைமையில் 2017-07-02 ஆம் திகதி ஒலுவிலில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில், ஒலுவிலில் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப் படவேண்டிய பல விடயங்களை ஒலுவில் பிரமுகர்கள் முன்வைத்தனர்.

இதன்போது கருத்துத்தெரிவித்த கலாநிதி ஜெமில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடி தீர்த்து வைப்பதாகவும், எதிர்காலத்தில் ஒலுவில் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசங்களில் உள்ள ஏனைய கட்சிகளில் தற்போதும் தங்கியிருப்பவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் உள்ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதற்கு கட்சியில் ஏற்கனவே இருப்பவர்கள் தங்களது பூரண ஆதரவைத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமிலின் இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பாடல் அதிகாரியுமான ஏ.எல்.ஜஹான், கலாநிதி ஏ.எம்.ஜெமிலின் பிரத்தியோக செயலாளர் சி.எம்.முனாஸ் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஷ்செய்க் அஸாம் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்களும் ஒலுவில் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -