நீர்கொழும்பு வடிகான்களில் கடல் நீர் கலப்பு

ஐ. ஏ. காதிர் கான்-


நீர்கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்று, கட்டுப்பாட்டு எல்லையையும் விட தாண்டியுள்ள நிலையில், நீர்கொழும்பு பிரதேச வடிகான்கள், கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கடல் நீரைக் கலந்து விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இதன் பரீட்சார்த்த முதற்கட்ட நடவடிக்கை, நீர்கொழும்பு - பெரியமுல்லை பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சபை உறுப்பினர் ரொய்ஸ் விஜித பெர்னாந்து தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இப் பிரதேசத்திலுள்ள வடிகான்கள் மற்றும் கால்வாய்களில் தற்போது பாரியளவிலான கடல் நீர் கலக்கப்பட்டு வருகிறது.
கடல் நீர் உப்புத்தன்மை கொண்டுள்ளதால், இதன்மூலம் டெங்கு நுளம்புகளையும், நுளம்புக் குடம்பிகளையும் பெரும்பாலும் அழிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, நீர்கொழும்பு அபிவிருத்தி மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சீ.ஜே. இயன் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

இந் நடவடிக்கைகள், கிரமம் கிரமமாக நீர்கொழும்பின் ஏனைய அனைத்து பகுதிகளுக்கும் துரிதமாக எடுத்துச் செல்லப்படும். வடிகான்கள், கால்வாய்கள், நீர் நிலைகள் என்பன பாரியளவில் பரீட்சிக்கப்படும். கடல் நீரை அவைகளில் புகுத்தி, தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 
 
நீர்கொழும்புப் பிரதேசத்திலிருந்து, டெங்கு நோய் தொற்றை முற்றிலும் அகற்ற வேண்டும் என்பதே, எமது பிரதான குறிக்கோளாகும் என்றும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -