ஏறாவூர், பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியில் மாற்றுத்திறனாளி ஒருவர் தவறி விழுந்து மரணித்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட சடலம் சந்திவெளியைச் சேர்ந்த செல்லத்தம்பி சித்திரவேல் (வயது 57) என்பவருடையது என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு காலும், ஒரு கையும் பலவீனமான இவர் மது அருந்திய நிலையில் வாவியோரமாக நடந்து செல்லும்போது தடுமாறி நீரில் விழுந்து மூச்சுத் திணறி மரணித்துள்ளார் என பிரேத பரிசோதனையின்போது தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை பின்னேரத்திலிருந்து காணாமல் போன இவர் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் வாவியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் சடலம் கிடப்பது பற்றி உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
