உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 அவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில்

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்-

 ஆகஸ்ட் 5 ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெறும்.
மாநாட்டில் மலையக கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 அவது சர்வதேச மாநாடு கணடாவின் டெக்னோ மீடியாவின் முழுமையான அனுசரனையுடன் இலங்கையின் யாழுப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் இம் மாநாட்டில் மலையக கலை கலாச்சார நிகழ்வுகளும் மலையக கலைகள் தொடர்பான சிறப்பு உரையும் இடம்பெறவுள்ளதாக மாநாட்டின் சிறப்புத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணிணின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் (01.07.2017) ஹட்டனில் நடைபெற்றது.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சருடன் ஜெர்மன் நாட்டின் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ராஜசூரியர்,இந்த மாநாட்டின் ஊடக ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநாட்டின் சிறப்புத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணிணின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன.;

இந்த அமைப்பானது 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் பண்பாட்டு இயக்கமாகும்.இந்த இயக்கத்தினுடைய கடந்த கால் மாநாடுகள் அவுஸ்திரேலியா,லண்டன்,தென்னாபிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கடைசியாக கடந்த வருடம் இந்தியாவின் புதுச்சேரியில் நடைபெற்றது.நானும் இந்த விழாவில் பங்குபற்றியிருந்தேன்.அதன் போது இதன் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் அடுத்த வருடம் இந்த விழாவை நாம் இலங்கையின் நடத்தலாமா அதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா?என என்னிடம் கேட்டிருந்தார்கள்.அதற்கு அமைய நான் அவர்களிடம் இதனை இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றேன் என நான் கூறினேன்.அதற்கு அமைவாகவே இந்த மநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் 6 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மிகவும் விமரிசையாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பலவேறு நாடுகளில் இருந்து பல முக்கியஸ்தர்கள் வருகை தரவுள்ளனர்.

இதன் மூலம் எமது நல்லாட்சியின் உண்மையான நிலைமைகளை நேரில் கண்டு தெரிந்து கொள்வதற்காக ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இருக்கின்றது.மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் மூலமாக எமது கலை கலாச்சார பண்பாடுகளை இன்னும் வளர்த்துக் கொள்ள முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மேலும் இந்த அமைப்பானது இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.அதனால் இங்கு நடாத்துவது பொருத்தமாக இருக்கும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.மேலும் இந்த மாநாட்டில் இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்து கலை கலாச்சார குழுக்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட இருக்கின்றார்கள்.எமது மலையகத்தில் இருந்தும் ஒரு பேச்சாளர் அதாவது மலையக கலை கலாச்சாரம் தொடர்பாகவும் ஒரு சில மலையக கலைகளும் அங்கு மேடையேற்ற இருக்கின்றோம்.

எனவே அனைவரும் இந்த மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என நான் அழைக்கின்றேன்.விசேடமாக எமது நாட்டின் தற்பொழுது நிலைமைகளையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதும் அதன் மூலமாக எமது சுற்றுலா துறையையும் அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதும் இதன் ஒரு நோக்கமாக இருக்கின்றது.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -