பிளாஸ்­டிக்கில் அரிசி செய்­வது சாத்­தி­யமா?

பிளாஸ்டிக் அரிசி' என்­கிற கதை அண்மைக் கால­மாக ஊட­கங்­க­ளிலும் வலைத்­த­ளங்­க­ளிலும் பேசப்­ப­டு­கி­றது. பிளாஸ்­டிக்கில் அரிசி செய்­வது சாத்­தி­யமா? பிளாஸ்டிக் அரிசி, உண்­மை­யான அரி­சி­போல கொதி தண்­ணீரில் வேகுமா? என்ற பல கேள்­விகள் எமக்குள் எழுந்­தாலும், பிளாஸ்டிக் என்­ற­வுடன் எமக்குள் ஒரு­வித பயம் ஏற்­ப­டவே செய்­கி­றது. எனவே இதன் நம்­பகத் தன்மை பற்றி, சிட்­னியில் வசிக்கும் விவ­சாய உயி­ரியல் தொழில் நுட்­பத்­துறைப் பேரா­சி­ரியர் ஆசி கந்­த­ரா­ஜா­விடம் கேட்டோம்.

'பிளாஸ்டிக் அரிசி, சந்­தைக்கு வந்­தி­ருப்­ப­தாகச் சொல்­வது முற்­றிலும் புரளிக் கதை. 2011-ஆம் ஆண்டு வியட்­நா­மிய இணையப் பத்­தி­ரிகை ஒன்­றுதான் முதன்­மு­தலில் பிளாஸ்டிக் அரிசி சந்­தைக்கு வந்­தி­ருப்­ப­தா­கவும், அது சீனாவில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­கவும் செய்தி வெளி­யிட்­டது. அதன்­பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளி­வந்த செய்­திகள் அனைத்­துமே வியட்­நா­மிய இணையப் பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்­தியைச் சார்ந்தே இருந்­தன'.

கேள்வி: இது­பற்றிச் சற்று விளக்­க­மாகச் சொல்ல முடி­யுமா?

சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரிசி மிகப் பிர­பல்­ய­மா­னது. இது நல்ல சுவையும் மணமும் கொண்­டது. இந்த அரிசி அவி­யும்­போது வெளி­வரும் வாசனை, பசியைத் தூண்டும் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது. வுச்சாங் அரிசி விலை­யா­னதால் வியா­பா­ரிகள் கலப்­படம் செய்­வ­தா­கவும் இத­னுடன் பிளாஸ்­ரிக்கால் செய்­யப்­பட்ட போலி அரி­சியை கலப்­ப­த­கவும் வியட்­நா­மிய இணையப் பத்­தி­ரிகை தெரி­வித்­தது. 

இந்த கலப்­பட அரி­சி­யா­னது உருளைக் கிழங்கு, மர­வள்ளிக் கிழங்கு போன்ற மாச்­சத்­துள்ள கிழங்­கு­களை அரைத்து அரிசி போன்று செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அதற்கு இர­சா­ய­னங்­களைப் பூசி அவை விற்­கப்­ப­டு­வ­தா­கவும், சீனாவின் புகழ்­பெற்ற 'வுச்சாங்' ரக அரி­சியைப் போன்ற தோற்­ற­ம­ளிக்க இந்தக் கலப்­பட ரக அரி­சி­களில் வாச­னைத்­தி­ர­வங்கள் தெளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பின்னர் மேலும் பல செய்­திகள் வெளி­வந்­தன. ஆனால் எந்த செய்­தி­யிலும் நேர­டி­யாக பிளாஸ்டிக் கலக்கப் பட்­ட­தாகத் தக­வல்கள் இல்லை. 

பிளாஸ்­டிக்கை அரைத்து அரி­சி­களின் அச்­சு­க­ளாக மாற்­று­வதன் மூலம் எந்­த­வொரு வணி­க­லா­பமும் பெற்­று­விட முடி­யாது. கலப்­படம் செய்­யப்­ப­டு­வது இலாப நோக்­கத்­திற்­காக மட்­டும்தான். ஒரு கிலோ அரி­சி­யை­விட ஒரு கிலோ பிளாஸ்­டிக்கின் விலை அதிகம் என்­பதால் வியா­பாரி இதில் எந்­த­வித இலா­பத்­தையும் பெற­மு­டி­யாது. அது­மட்­டு­மல்ல அரி­சியில் பிளாஸ்­டிக்கை கலந்தால் உலை கொதிக்­கும்­போது அல்­லது அரிசி அவி­யும்­போது பிளாஸ்டிக் உரு­கி­விடும்.

நாம் உண்ணும் பல­வி­த­மான உண­வு­களில் கலப்­படம் இருக்­கி­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. சில துரித உண­வு­களைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தற்கும், குறித்த வடிவம் பெறு­வ­தற்கும், கெட்­டுப்­போ­காமல் இருப்­ப­தற்கும் நெகிழ்வுத் தன்­மை­யுள்ள சில இரசாயனப்­பொ­ருட்கள் கலக்­கப்­ப­டு­கின்­றன என்­பது உண்­மையே. ஆனால், ஒட்­டு­மொத்­த­மாக பிளாஸ்­டிக்கைக் கொண்டு வாளி, கோப்பை கதிரை, மேசை செய்­வது போல, அரிசி தயா­ரிப்­பது சாத்­தி­ய­மில்லை.

கேள்வி:
ஐரோப்­பிய நாடு­களில் திடீர் நூடில்ஸ் போன்று திடீர் அரிசிப் பைகள் விற்­கப்­ப­டு­கின்­றன. அந்த அரி­சிப்­பையை கொதி தண்­ணீரில் போட்டால் சில நிமி­டங்­க­ளுக்குள் பைக்குள் இருக்கும் அரிசி அவிந்து சோறா­கி­விடும். இது எந்­த­வகை அரிசி?

இது இயற்­கை­யான அரிசி அல்ல. சரி­யாகச் சொன்னால் இது ‘நூடில்ஸ்-­அ­ரிசி’. நெல்லை அரி­சி­யாக்கும் போது பெரு­ம­ளவு குருணை வரும். இதை விற்க முடி­யாது. இதை அரைத்து பசை­யுள்ள சில மா வகை­களைச் சேர்த்து நூடில்ஸ் போன்று அரிசி தயா­ரிக்­கி­றார்கள். இதிலும் பிளாஸ்டிக் சேர்ப்­ப­தில்லை. இந்த அரி­சியின் விலை இயற்கை அரி­சி­யிலும் பல­ம­டங்கு அதிகம். இது அவ­சர உல­கத்தில் வாழும் சில­ருக்கு அவ்­வப்­போது உத­வலாம். ஆனால் அன்­றாடம் அரிசி உணவு சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு தோதுப்­ப­டாது.

கேள்வி:
சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் இணை­யங்­க­ளி­லெல்லாம் பிளாஸ்டிக் அரி­சி­யினால் சமைக்­கப்­பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்­டை­யாக்கி, நிலத்தில் அடித்துக் காண்­பிக்­கி­றார்­களே, அது­பற்றி உங்கள் கருத்­தென்ன?

அரி­சியில் இயற்­கை­யா­கவே அமைலோஸ் (இனிப்­புத்­தன்மை), அமை­லோஸ்-­பெக்ரின் (பசைத்­தன்மை) என்ற இரண்டு இரசாயனப் பொருள்கள் உண்டு. இவற்றின் அள­வுக்­கேற்­ற­ப­டியே அரி­சியின் தன்மை மாறு­படும். இந்­தி­யர்­க­ளுக்கு உதிர்ந்த சோறு வேண்டும். குச்­சி­களால் சாப்­பிடும் சீனர்­க­ளுக்கு பசைத் தன்­மை­யுள்ள சோறு வேண்டும். இதனால் ஜப்பான், சீனா போன்ற நாடு­களில் ஸ்டிக்கி ரைஸ் எனப்­படும் இயல்­பி­லேயே ஒட்டும் தன்­மை­யு­டைய அரிசி வகைகள் பயி­ரி­டப்­ப­டு­கின்­றன. இந்­த­வகை அரி­சியில் அமை­லோஸ்-­பெக்ரின் கூடு­த­லாக இருப்­பதால், அதன் கஞ்­சியில் நெகிழ்வுத் தன்­மையும் பசைத்­தன்­மையும் அதிகம் இருக்கும். இத­னால்தான் நம்­ம­வர்கள் இதை போஸ்டர் ஒட்டப் பாவிப்­பதுண்டு. இந்த வகை ஸ்டிக்கி ரைஸை சூடாக இருக்கும் போதே இறுக்­க­மாக அமத்தி உருண்­டை­யாகப் பிடித்தால் அவை உடை­யாத, உர­மான, உருண்­டை­யாக மாறும். பசைத் தன்­மை­யுள்ள அரி­சி­மாவில் செய்­யப்­பட்ட பிடி கொழுக்­கட்­டையை நிலத்தில் எறிந்து பாருங்கள் அது உடை­யா­தல்­லவா? அது மாதி­ரித்தான் இதுவும்.

இதே­வேளை நான் இன்­னு­மொன்­றையும் சொல்­ல­வேண்டும். இந்த மாதி­ரி­யான செய்­தி­களை வலைத்­த­ளங்­களில் பதிவேற்றுகையில், ஆதாரமும், உண்மைத் தன்மையும் தெரிந்தால் மட்டுமே பகிரவேண்டும். இதுகுறித்த வீடியோக்கள் பெரும்பாலும் புரியாத மொழிகளிலேயே முதலில் வெளிவந்தன. இன்றுவரையும் நிரூபிக்கப்படாத இந்தச் செய்திகள் அனைவரையும் அச்சுறுத்தும் வதந்திகளாகவே பல மொழிகளில் பரவிவருகின்றன. அறிவு பூர்வமாக நிரூபிக்கப்படாத வரையில் இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும், என நீண்டதொரு விளக்கம் தந்தார் பேராசிரியர் ஆசி கந்தராஜா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -