வேதாந்தியின் கவிதைகள்' நூல்வெளியீடு

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகதவிசாளரும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் தேசிய முன்னணி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் எழுதிய 'வேதாந்தியின் கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07-07-2017) 'முழு நிலவில் கலை இரவில்' அக்கரைப்பற்றின் அழகிய கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுநள்ளிரவு 12 மணி வரை மருதமுனைக் கமாலின் இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரியுடன் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வேதாந்தியின் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி மற்றும் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு சர்ஜூன் ஜமால்டீன் (LLB , MA) தலைமைதாங்கவுள்ளதுடன், கபூர் மாஸ்டர் (ஓய்வுபெற்ற அதிபர்), திருமதி. கவிதாநாதிரா(B.Ed), சட்டத்தரணி ஏ.எல்.ஆஸாத், ஈழமதி ஜப்பார் (கவிஞர்) மற்றும் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் ஆகியோரும் உரைநிகழ்த்த உள்ளனர்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் 'இருளின் நிழலில்' என்ற முதலாவது கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டதன் பின்னர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் 'வேதாந்தியின் கவிதைகள்' என்ற இரண்டாவது நூல் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'வேதாந்தியின் கவிதைகள்' நூலானது முஸ்லிம் தேசியஆய்வகத்தால் வெளியிடப்படுகின்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் தேசிய ஆய்வகத்தினால் மருதமுனைக் கமால், இசைவாணர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டுநிகழ்வுக்கு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு முஸ்லிம் தேசிய ஆய்வகம் அன்புடன் அழைப்புவிடுக்கின்றது.


Attachments areaஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -