இன்று ஜக்கம்மா ஆய்வுநூல் வெளியீடு

 காரைதீவு நிருபர் சகா-

கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை மாணவன் சோமசுந்தரம் தினேஸ்குமார் எழுதிய ஜக்கம்மா ஆய்வுநூல் வெளியீட்டுவிழா இன்று(12) புதன்கிழமை நிறுவக இராசதுரை அரங்கில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக ஓய்வுநிலைப்பேராசிரியர் எஸ்.மௌனகுரு கௌரவஅதிதிகளாக நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் முன்னாள் பணிப்பாளர் நலாநிதி கே.பிறேமகுமார் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பொறியியலாளர் தா.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்த சிறப்பிக்கின்றார்கள்.

மேலும் சிறப்பதிதிகளாகவும் அதிதிகளாகவும் பல பிரமுகர்கள் அமைப்புகள் கலந்துசிறப்பிக்வென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1940ஆம் ஆண்டளவில் திருக்கோவில் ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் குடியேறி வாழ்ந்துவரும் தெலுங்கு சமுகத்தினரின் வாழ்வியல்பற்றிய இவ்வாய்வு நூலை சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச்சேர்ந்தவர்.
கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயத்தின் முதல் முதலாக பல்கலைக்கழகம் சென்ற மாணவன் தினேஸ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -