சமூக அரசியல் அறுவடைகாலம்

ன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம்,ஊழல்,சுயவிளம்பரம்,பிரதேசவாதம் மற்றும் சாகாவரம் போன்ற அழுக்குகளால்சூழப்பட்டுள்ள நிலையில்;
சமூகத்தில் ஆரோக்கியமான எழுத்துக்களாலும்,புரிதல்களாலும் பல ஆண்டுகலாக விதைக்கப்பட்ட *மாற்றம்* அறுவடைக்காலம் தொடங்கும் நிலையில் உள்ளது.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது உறவுகளை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாகவும் சுயசிந்தனையும் முற்போக்கும் உடைய சக்தியாகவும் எழுத்துக்கள் வார்த் தெடுக்கிறது.

"மக்களைத் திரட்டு -அரசியல் கலாச்சாரத்தை மாற்று'’’என முழங்குகிறோம்.

அதேநேரத்தில் எழுத்தாளர்கள் சமூக அக்கறை கொண்டோராக இருக்க வேண்டும்; அவர்களின் படைப்புகள் பரபரப்பை ஏற்படுத்துபவையாக இல்லாமல் சமூகத்துக்கு பாடம் சொல்பவையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.ஒவ்வொரு இளைஞனின் 24மணித்தியாள வாழ்க்கை ஓட்டத்தில் 1நிமிடமாவது தன்னையும் ,சமூகத்தில் அவனது இருப்பையும் உணர்வதற்கு எழுத்துக்கள் அர்த்தமுள்ளதாக வேண்டும்.

பரம்பரை அரசியலைப் பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை பலி கொடுக்கலாம் என்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களை பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும்

யதார்த்தத்திற்கும், பெரும்பான்மை உணர்வுகளுக்கும் எதிரான விஷயத்தை பேசுவதும்,போலிமுகநூள்களால் விமர்சிப்பதும் முற்போக்கு, திறமை மற்றும் கடமை என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் பரவி வருகிறது.

எனது எழுத்துககள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களையும் யதார்த்ததையும் முன்னிலைப் படுத்துகின்றது. தனிநபர் துதி பாடலையும், எலும்புத் துண்டுகளுக்கா வாலாட்டுவதையும் தவிர்த்து, ஊரின் சகலதுறை சாரந்தவர்களை உள்ளடக்கிய பலமான தலைமையை தேடுகிறோன்.நமது ஒற்றுமையும்,கட்டுப்பாடும் 5நிமிடம் தொழுகையிலும்,இறைச்சிக்கடையில் காத்திருப்பதில் மட்டுமே உள்ளது.இந்த நிலை மாற்றம்காண எங்களை நாங்கள் தயார்படுத்த வேண்டும்.

எமதுமனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.நாங்கள் எங்களை நாமே ஆள்வோம்.எங்கள் பலமும் பலவீனமும் எங்களது உடமை.எங்களை அடிமையாக்கி எங்கள் உணர்வுகளை ஊமைகளாக்கி,எங்களுடன் இருப்பவர்கள் எங்களை ஏப்பமிடுவதை இனிமேலும் சகித்துக் கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் ஜடமல்ல.

எனது எழுத்துக்கள் ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட சமூகத்தை தலமைதாங்கும் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்டது.ஒருகுறிப்பிட்ட வர்க்கத்திற்கு அல்லது நபருக்கு மட்டும் சாகும்வரை சொந்தமானது அல்ல.

எனது ஒவ்வொரு பதிவுகளும் ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை நமது ஊரில் புதியவர்களுக்கு விரிவுபடுத்தவும் தோள்கொடுங்கள் எனஉரிமையோடும் உணர்வோடும் கேட்கிறது.

ஆகவே எனது எழுத்துக்கள் விமர்சனங்களை எப்போதும் காத்துநிற்கிறது.மாறாக சிலஅரசியல்வாதிகளின் அள்ளக் கைகளுக்கு உரியபதிலை சூடாக மட்டுமல்ல சுதந்திரமாகவும் வழங்குவதற்கும் பின்நிற்பதில்லை.

எனது படங்களை முகநூளில் அதிகமானவர்கள் பதிவிட்டு மோசமாக விமர்சிக்கின்றனர்.இதன்மூலம் இறைவனைத் தவிர உங்களால் எனது பயணத்தை நிறுத்தவோ,எனது குரல்வலையை நசுக்கவோ முடியாது.

இந்த சமூகத்தில் விடைகளற்றுக் கிடக்கும் பல வினாக்களுக்கு விடைகளுடனும்,மூக்குவரை விரல்நீட்டுவனைக் கூட மூச்சுத்திணர வைக்கும் வித்தையும் கற்றவனாகவே பயணிக்கின்றேன்.எப்போதும் சுன்டெலியை விட திமிங்கிலம் பிடிக்கும் போராட்டம் என்பதை உணர்வேன்.ஆகவே முதுகிற்கு பின்னால் முகமூடி போட்டு குத்துவதைவிட எதிரே நின்று முகம்காட்டி சண்டையிடும் கராமில் பிறக்காத நம்ம ஊரானாக இருப்பது பெருமை.

சமூகத்தில் முற்போக்குள்ளவர்களை ஆதரிக்கவும்,ஆர்வப்படுத்தவும் படித்தவர்களே பாமரமக்களைவிட தடையாக உள்ளனர்.நமது ஊரில் கிராமப்புறங்களில் ஒருவேளை உணவுக்குகூட கஷ்டப்படும் மக்களிடம் இருக்கின்ற உணர்வு,நகரப்புற மக்களிடம் குறைவாகவே உள்ளது.

பயணங்கள் முடிவதில்லை,என்றாலும் சில பாதைகளை மாற்றுவதற்கு புதிதாக சிலபயணங்களை முடித்தே ஆகவேண்டும்.

ஆகவே நம்மை நாமே ஆள்வோம்.நமது மண்ணினதும் நமது எதிர்கால சந்ததியினரதும் சரித்திரத்திற்கு நாமே பங்காளர்களாவேம்.

எமது அருவடை நோக்கிய பயணத்தில் இறைவன் நாட்டமும்,தீர்ப்புமே இறுதியானதும் நிலையானதும்.நாம் அருவடை செய்யாதபோதும் நமது அடுத்த தலமுறையின் அருவடைக்காவது காவலர்களாக இருப்போம்.

ஆகவே எனது எழுத்துக்களும் தேடல்களும் உங்களுக்காக உங்களுடன் எப்போதும் இருக்கும்.வெறுமனே எழுதிக் கொள்வதால் சமூகத்தில் மாற்றத்தை காணமுடியாது என்ற பலரது உண்மையான விமர்சனத்துக்கு அர்த்தமுள்ள பதிலுக்காக?? உங்களுடன்.சமூக அரசியல் அறுவடைகாலம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -