வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று கனவு காணும் ஹசனலி சேர் அவர்கள்...!

சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கின்றார் முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமான ஹசனலி அவர்கள்.
இன்று வீரகேசரி பத்திரிகையில் ஒரு அறிக்கையொன்றை விட்டுள்ளார், அதிலே வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்றும் அதுதான் மறைந்த தலைவரின் என்னமுமாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் புதிய முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படித்தி அதன் மூலம் இந்த கொள்ளைகளை முன்னெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கிழக்கை மையமாக கொண்டு இயங்கும் முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்காக முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஹசனலி அவர்கள் கூறும் கூற்றானது முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கும் விடயம் போன்று உள்ளது எனலாம்.

மறைந்த தலைவரின் ஆசை வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுதான் என்று கூறுவது மிகப்பெறிய பொய்யாகும் என்பதை ஆதார பூர்வமாக எங்களால் நிரூபிக்கமுடியும், மறைந்த தலைவரின் பெயரைச்சொல்லி முஸ்லிம்களை மடையனாக்கலாம் என்று நினைக்கும் காலம் மலையேறி விட்டது என்பதை ஹசனலி அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் எதைப்பற்றி பேசியிருந்தாலும் அவரது உள்நோக்கம் எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிடவேண்டும் என்பதாகவே இருந்தது என்பதற்கு ஆதாரங்களை எங்களால் வைக்கமுடியும்.

அஸ்ரப் அவர்கள் மரணிப்பதற்கு முன் 2000ம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சியிலே முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்புத் திருத்தத்தில் வடக்குகிழக்கு சம்பந்தமாக தெளிவாகவே பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

இந்த அரசியல் யாப்பு தொடங்கும் காலத்திலிருந்து பத்துவருடங்களுக்கு வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்று தற்காலிகமாக இணைந்தே இருக்கும் என்றும், பத்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு மூன்று மாதத்துக்கு முன் கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்படி ஏதோ ஒரு காரணத்தால் அந்த சர்வஜண வாக்கெடுப்பு நடத்தப்பட முடியாமல் போகும்பட்சத்தில், பத்து வருடம் முடிவாக இயல்பாகவே வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் பிரிந்து விடும் என்றும், அதன் பிறகு இரு மாகாணங்களும் தனித்தனியாகவே இயங்கும் என்றும், குறிப்பிட்டுள்ளதை அவர் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அந்த தீர்வு திட்டத்தை சமர்பித்து மூன்று மணித்தியாளங்கள் பாராளுமன்றத்திலே பேசியுமிருந்தார்.

2000ம் ஆண்டைய இந்த தீர்வு திட்டத்தை தானும் ஏற்றுக்கொண்டதாக சம்பந்தன் ஐயாவும் அண்மையில் நடந்த முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை கூட்டத்திலும், கொழும்பில் நடந்த அஸ்ரப்பின் மறைவுதின நிகழ்ச்சியிலும் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

அப்படி அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2000ம் ஆண்டய தீர்வு பொதி அமுழுக்குவராது விட்டாலும், அதன் மூலம் அஸ்ரப் அவர்கள் எதனைச் சாதிக்க முற்பட்டிருந்தார் என்பது சாதாரண குடிமகனுக்கும் விளங்காத ஒன்றல்ல என்பது தெளிவானதாகும்.

அதே நேரம் 1997ம் ஆண்டய தீர்வு பொதியிலும் இதனையே அஸ்ரப் அவர்கள் விரும்பியிருந்தார் என்பதை அந்த தீர்வு பொதியை எடுத்து வாசித்து பார்ப்பவர்களுக்கு விளங்கக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்த ஆதாரங்கள் அஸ்ரப்பின் மரணத்துக்கு முன்பான கடைசி என்னக்கருவாக இருந்தது என்பதற்குறிய ஆதாரமாக இருக்கின்றது என்பதை யாராலும் இலேசாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்மென்று நம்புகின்றோம்.

அதே நேரம் அஸ்ரப் அவர்கள் 1997ம் ஆண்டய தீர்வுதிட்டத்திலும், 2000ம் ஆண்டய தீர்வு திட்டத்திலும் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவென்றால், வடக்கோடு கிழக்கு நிரந்தரமாக இணைவதாக இருந்தால் கிழக்கு மக்களிடம் சர்வஜணவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தேயாகும் என்பதாகும்.

இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகிறது... கிழக்கு மக்களின் அபிப்பிராயம் இல்லாமல் வடக்கையும் கிழக்கையும் இணைக்கமுடியாது என்ற கருத்துத்தான் வழுவாக அங்கே தெறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கிழக்கு மக்கள் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுப்பார்கள் என்பது தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு தெறியாத ஒன்றல்ல என்பதையும் நாம் இந்த இடத்தில் கவணிக்க தவறக்கூடாது.

இருந்தாலும் நாமும் இப்போதுள்ள கலநிலைவரத்தை கவணத்தில் எடுத்து இது சம்பந்தமாக என்ன முடிவுக்கு வரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும், மாறாக தனிநபர் அபிப்ராயங்களுக்கு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தி செல்லலாம் என்று நினைப்பது என்பது மாபெரிய தவறாக எதிர்காலத்தில் வந்து முடியலாம் என்பதை குறிப்பிட்ட தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கை இணைப்பதனால் நாம் என்ன உரிமையை இழக்கின்றோம் அதற்கு ஈடாக என்ன தீர்வை பெறப்போகின்றோம் என்ற விடயத்தில் நீங்கள் திருப்திப்படுவதைவிட்டுவிட்டு, முஸ்லிம்களாகிய பொது மக்களுக்கும் அதனை முதலில் தெளிவுபடுத்திவிட்டு அவர்களின் சம்மதத்தையும் பெறுவதற்கு குறிப்பிட்ட தரப்பினர் முயற்சிக்கவேண்டும்.
மாறாக தான்தோன்றித்தனமாக நாங்கள்தான் ராஜாக்கள் என்று நினைத்துக்கொண்டு இதுதான் தீர்வு என்றும் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொடுத்துவிட்டு ஏட்டிலே எழுதித்தரப்படும் சட்டப்பாதுகாப்புக்கு(ஏட்டுச்சுரக்காய்) நாங்கள் ஏமாறக்கூடாது என்பதும், இதுதான் உங்களுக்கு நாங்கள் தறும் தீர்வு என்று தமிழ் தரப்பினர் தறுவதை நாம் ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபையானாலும் , தென்கிழக்கு அலகு என்றாலும் இதன் மூலம் கிடைக்கும் நண்மை தீமைகளை ஆராய்ந்தோமேயானால் அதன் மூலம் இன்னும் பல பிரச்சினைகள்தான் தோன்றப்போகின்றதே தவிர அதில் தீர்வு கிடைப்பதற்கு எந்தவிதமான சந்தர்ப்பங்களும் கிடையாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

ஆகவே அரசியலில் நாங்கள் முதிர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் எல்லாம் சரி என்றாகிவிடாது என்பதை புரிந்து கொண்டு, இந்த விடயத்தில் அரசியல் சார்பற்ற படித்த புத்திஜீவிகளிடத்திலும், அரசியல் விடயத்தில் ஆர்வமுள்ளவர்களிடத்திலும் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவே சிறந்த முடிவாக இருக்கும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -