உறவுகளை நினைத்து உணர்வுடன் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள்..!

புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2017 அன்று காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. .

நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி கட்சியின் உப தலைவர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா (கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு நா.சேனாதிராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் , வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, சிவன் கோவில் தலைவர் நவரத்தினம், முன்னாலள் ஒய்வு பெற்ற அதிபர் சோதி மாஸ்ரர், சமூக ஆர்வலர் திருமங்கலம், மற்றும் இளைஞரணியின் செயலாளருடன், இளைஞரணியின் மாவட்ட செயலாளரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞரணியின் மாவட்ட உப தலைவர்களான நிகேதன், கெர்சோன்,மாவட்ட இளைஞரணியின் அமைப்பாளர் பிரதீபன்,மாவட்ட இளைஞரணியின் நிர்வாக உறுப்பினர் கயூரன், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -