ஈரான் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இம்போட்மிரர் இணையத்தில் ஏற்கனவே பார்வையிட்டீர்கள் அச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்போது உரிமைகோரியுள்ளனர். என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈரானில் மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும் என கூறப்படுகின்றது.துப்பாக்கியுடன் பாராளுமன்றத்தில் நுழைந்த நால்வர் துப்பாக்கி சூட்டு நடத்தியதுடன், தற்கொலை குண்டையும் வெடிக்கச் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெறிவிக்கின்றன.இதேவேளை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கொமேனி அடக்கஸ்தலத்தின் மீதும் இதே நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த இரு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.